நாம் மக்களுக்காக முன்னெடுத்திருந்த பெரும்பணிகளின் அறுவடைக் காலம் இது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 11th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் நாம் எமது கட்சியின் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளோம். அந்தவகையில் வரவுள்ள தேர்தலை நாம் வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்-

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நாம் வட கிழக்கில் தனித்து எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அத்துடன் கட்சியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களும் கட்சியின் ஏகோபித்த முன்மொழிவுகளாகவே இருக்கின்றது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கமைய நாம் மத்தியில் பெரும்பான்மை ஆளும் கட்சியுடன் பங்காளிகளாக இருந்தாலும் மாநிலத்தில் நாம் எமது கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்திலேயே தேர்தாலை எதிர்கொள்கின்றோம்.

நாம் இன நல்லிணக்கம் மற்றும் தேசிய நல்லுறவில் பலமாக இருக்கும் ஒரு கட்சிக் கட்டமைப்பைக் கொண்டவர்கள். அத்துடன் எம்மிடம் தீர்வுகளைக் காண்பதற்கான பலமான பொறிமுறையும் அதனை செயற்படுத்தும் ஆற்றலும் உண்டு.

அதுமட்டுமல்லாது நாம் கடந்தகாலத்தில் மக்களுக்கு இன்னோரன்ன பல்வேறு சேவைகளையும் பெரும் பணிகளையும் செய்திருக்கின்றோம். அத்துடன் மக்களுக்காக நாம் கடந்த காலத்தில் முன்னெடுத்த செயற்பாடுகளின் அறுவடைக் காலமாகவே இந்தத் தேர்தலில் முகம் கொடுக்கின்றோம். அந்தவகையில் அதற்கான அறுவடைகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி செயற்பட்டு எமது கட்சியின் வெற்றியை பலப்படுத்த உழைப்போம் என்றார்.

Related posts:

அரச தொழில் வாய்ப்புக்களின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசேட கவனம் வேண்டும் - அர...
மக்கள் எமக்கு அளித்த அரசியல் பலத்தைக் கொண்டு தொடர்ந்தும் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்போம் – ...
யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் - சமகால நிலைம...