மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அனைத்து முயற்சிகளுக்கும் பூரண ஒத்துழைப்பும் வழங்கப்படும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 12th, 2020

எமது பிரதேசங்களில் காணப்படும் வளங்களை ஒருங்கிணைத்து எமது மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அதன் அடிப்படையிலேயே இன்றைய சிறு பயிர் செய்கை அங்குரார்ப்பணம் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமலை மாவட்ட அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற இயற்கை விவசாய முறையில் சிறு பயிர் செய்கையில் பெண்கள் ஈடுபட வேண்டியதன் அவசியம் தொடர்பில் திருகோணமலை மாவட்ட பெண்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கெடுத்திருந்தார்.இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் –  “எமது மக்களின் வாழ்வியலை சிறப்பானதாக மாற்றி, அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் வாழுகின்ற நிலையை உருவாக்குவதற்கான மூல வளங்கள் எமது தாயகப்  பிரதேசங்கள் எங்கும் பரவிக் காணப்படுகின்றது.

எனினும், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டவர்கள், தங்களுடைய சுயநலன்களுக்காக மக்களை தவறாக

வழிநடத்தியிருந்தார்கள். அவ்வாறான வழிநடத்தல்களின் விளைவுகளில் ஒன்றாக எமது மக்கள் சுய பொருளாதார சிந்தனைகளை தொலைத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் புதிதாக ஆட்சிப் பீடமேறியுள்ள எமது அரசாங்கம் நாட்டில் சுய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. இந்நிலையில் எமது மக்கள் மத்தியில் இருந்து முன்னடுக்கப்படகின்ற அனைத்து விதமான சுய பொருளாதார முயற்சிகளுக்கும் தனது ஒத்துழைப்பு இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Related posts:


இரணைதீவில் பாரிய கடலட்டை கிராமம்: 350 பேருக்கு வேலை வாய்ப்பு - வருடாந்தம் 3 கோடி வருமானம்! -அமைச்சர்...
உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்...