அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 28th, 2019

பரமாமேஸ்வரா வீதி திருநெல்வேலியில் அம்மாச்சி பாரம்பரிய உணவு விற்பனை நிலையத்தை கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்த சிறப்பித்து சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு இந்த உணவகம் மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கவேண்டும் என்ற நோக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் நிறுவப்பட்டுள்ளது.

அத்துடன் பெண்களை அவர்களது சுய பொருளாதாரத்தில் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் முற்றுமுழுதாக பெண்களை மையமாக கொண்டு செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்போது பிரதம விருந்தினர் உரையாற்றிய அமைச்சர் இந்த பாரம்பரிய முறை உணவு பழக்க வழக்கங்கள் எமது இளம் தலைமுறையினருக்கு வழங்குவதற்கு கழமமைத்துள்ளது. அத்துடன் குறைந்த விலையிலும் தரமான உணவுகளை  பெற்றுக்கொள்ள முடியும். மேலும் என்னிடம் இந்த பாரம்பரிய முறை அம்மாச்சி உணவகத்தை மேலும் பல இடங்களில் விஸ்தரிக்க கோரிக்கை விடுத்தள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது  இந்த உணவகத்தின் செயற்பாடுகளில் தூய்மை பேணப்படவது  அவசியம். இதை  கடமையாற்றுபவர்கள் மட்டுல்லாது வருபர்களும் சமூக அக்கறையுடன்  பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி மற்றும் விவசாயத்துறைப் பேராசிரியர் நந்தகுமர் உள்ளிட்ட பல்கலைக்கழக பீடங்களின் பேராசிரியர்கள் பலருடன் அரசியல்பிரமுகர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடு...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...
நடைமுறை சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் மக்களிடம் நான் தொடர்ச்சியாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன் – அமைச...