கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 20th, 2020

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை விரைவில் தரமுயர்த்தப்பட வேண்டும் என கடல் தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த விடயம் விவாதத்திற்கு வந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த கல்முணை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.

ஆனால் அன்று அரசுக்கு ஆதரவு கொடுத்த தமிழரசுக் கட்சியினர் அதற்கான தீர்வைவைப் பெற முயற்சிக்கவில்லை.

ஆனாலும் நீண்டகாலமாக குறித்த தமிழ் பிரதேச சபையின் தரமுயர்த்தல் தொடர்பான விடயம் பேசு பொருளாக இருந்துவரும் நிலையில் பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்து இவ்விடயம் தொடர்பாக என்னிடம் அதிகளவான கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் மக்களின் அபிலாஷையான குறித்த பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவார்களும் அண்மையில் சாதகமான சமிக்ஞை காட்டியிருந்தார்.

இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த விடயத்தை இழுத்தடிப்பு செய்யாது விரைவில் பிரதேச செயலகம் ஹுப்ல்தரமுயர்த்தப்பட வேண்டும் என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது வலியுறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ...
வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்...
ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந...