மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!
Thursday, October 19th, 2017
கடந்தகால தமிழ் தலைவர்களது தவறான அரசியல் வழிநடத்தலால் பின்னடைவு கண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு நாம் நம்பிக்கை மற்றும் தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வெற்றிகண்டுள்ளோம். ஆனாலும் இதை மேலும் அதிகளாவாக முன்னெடுத்தச் செல்வதற்கு மக்களின் அதிகரித்த ஆதரவும் ஒத்துளைப்பும் எமக்கு அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாவற்குழி 300 வீட்டுத்திட்டம் பகுதி மக்களின் அழைப்பின்பேரில் சான்றோர் சனசமூக நிலைய முன்னறில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அழிவு யுத்தம் முடிந்துள்ள இச்சூழலில் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதகம் ஏற்படும் சந்தர்ப்பங்களுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமோட்டோம்.
கடந்த காலங்களைப்போன்று எதிர்காலங்களிலும் உணர்ச்சிப் பேச்சுக்களுக்கும் உசுப்பேற்றுதல்களுக்கும் இடங்கொடுக்காது உண்மையானதும் நியாயமானதுமான கருத்தக்களுக்கு செவிகொடுத்து மக்களுக்கு பணிசெய்யும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவேண்டும்.
எமக்கு கிடைத்த வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காகவும் மிகச் சிறந்தமுறையில் நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.
எம்மால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலன் சார் பணிகளையோ அபிவிருத்தி சார் வேலைத்திட்டங்களையோ எக்காலத்திலும் எந்த தமிழ் அரசியல்வாதிகளாலோ அன்றி தமிழ்க் கட்சிகளாலோ முன்னெடுக்கமுடியாது என்பதையும் திடமாக கூறவிரும்புகின்றேன்.
மேலும் நாட்டில் நிரந்தர இயல்பு நிலைமையை ஏற்படுதவேண்டுமானால் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தவதில் ஆரம்பித்து அதனைக் கட்டம் கட்டமாக முன்னெடுக்கவேண்டும். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்த்தெடுக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது குறித்த பகுதி மக்கள் தமது பகுதி வீதிகள் புனரமைப்பு, வீடுகள் புனரமைப்பு, காணிகளுக்கான நிரந்தர உரிமங்கள், பாலர் பாடசாலைக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உதவிகள், வாழ்வாதாரம் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை செயலாளர் நாயகம் அவர்களிடம் முன்வைத்தனர்.
மக்களது கோரிக்கையைளை செவிசாயத்துக்கொண்ட செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் உரிய துறைசார் தரப்பினருடன் பேசி சுமுகமான தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி மற்றும் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், சாவகச்சேரி பிரதேச நிர்வாக செயலாளர் மெடிஸ்கோ,.சாவகச்சேரி நகர நிர்வாக செயலாளர் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|
|




