மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கு முன்னின்று உழையுங்கள் – நிர்வாக செயலாளர்களிடம் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!
Thursday, August 16th, 2018
மக்கள் எதிர்கொண்டுவரும் வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பான பிரச்சினைகளின் தேவைகளை அறிந்து சிறப்பானதும் தூரநோக்குள்ளதுமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனூடாகவே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும்.
அந்தவகையில் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாவட்டங்களின் கட்சியின் நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த காலங்களில் நாம் பல்வேறுவகையான அபிவிருத்தி திட்டங்களையும் கட்டுமாணங்களையும், மக்கள் நலன்சார் திட்டங்களையும், தொழில் வாய்ப்புக்களையும் எமது மக்களுக்காக பெற்றுக்கொடுத்திருக்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


