புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் – மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமுறையில் வெற்றிகண்டார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 6th, 2023


…………
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் எரிபொருள் இன்றி மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கு பயன்படுத்தும் வெளியிணைப்பு இயந்திரம் புதிதாக தயாரிக்கப்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகளை பரிசோதனை செய்து  பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

இந்த சோதனை நடவடிக்கைகளில்   கடல்தொழில் அமைச்சின் பணிப்பாளர்  சுசந்த ககவத்தை ,கடற்படையின் செயற்பாட்டு பிரிவின் உதவிப் பணிப்பாளர் வாகெல Wagala ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
.
இதனிடையே கடற்றொழில் அமைச்சு புதிதாக நிறைவேற்றவுள்ள கடற்றொழில் திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக  இன்றையதினம் கொழும்பில்  அனைத்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர்களும் கலந்து கொண்ட விஷேட நிகழ்வொன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். .

இதேவேளை இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள வாழைச்சேனை உட்பட பத்து துறைமுகங்களில் மணல் நிரம்பி காணப்படுவதால் படகுகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வும் அவற்றை அகற்றுவதற்கான தேவை தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக முகாமையாளர் மற்றும் பொது முகாமையாளர் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலின்போது
அமைச்சின் செயலாளர், சட்ட அதிகாரி மற்றும் அமைச்சின் பொறியியலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000

Related posts: