எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!!

Monday, February 14th, 2022

மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மயிலிட்டித் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரண்டாம் கட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதற்கா ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இதனிடையே எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் ஒரு வருட காலத்தில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள.

இந்நிலையில் 3 ஆம் கட்டப் பணிகளையும் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒவ்வொரு துறைமுகங்களிலும் அந்தந்த மாவட்ட மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய மயிலிட்டித் துறை முகத்தின் மூலம் பிரதேச மக்கள் நன்மையடையும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே அத்துமீறி எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து சட்ட விரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்ட்டு மயிலிட்டி மீ்ன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராட்சத இந்திய இழுவைமடிப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார்.

குறித்த படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தமது அன்றாடச் செயற்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாக துறைமுகத் தரப்புக்கள் அமைச்சரிடம் முறையிட்ட நிலையில், கடற்றொழில் அமைச்சர் அவற்றை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உரிமைகளை வென்றெடுக்க பிராந்தியக்கூட்டு! வளமான தேசத்தை உருவாக்க தேசியக்கூட்டு!! - டக்ளஸ் தேவானந்தா
கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிடைத்...
நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை - பயங்கரவாத எதி...

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் - டக்ளஸ் எம்.பி. நா...
பதினைந்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு -...