மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Sunday, June 14th, 2020

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வேலனையில் இன்று இடம்பெற்ற காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச வட்டார செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அடுத்த ஐந்து வருடங்களுக்கு யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜனாதிபதியாக தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரே இருக்கப் போகின்றனர்.

ஆனால் நான் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேணடும். நான்கு அல்லது ஐந்து ஆசனங்களை மக்கள் வடக்கு கிழக்கில் எமக்கு தராவிட்டால் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதில் ஆர்வம் செலுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு தீர்க்கப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை சுட்டிக் காட்டிய செயலாளர் நாயகம் அவர்கள், வேலை வாய்ப்பு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் போன்வற்றிற்கும் தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததுடன் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட வீடுகளை பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, எல்லாவற்றிற்கும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...
அராலி மினங்குப்பிட்டி வீதி புனரமைப்புக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...