மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, February 24th, 2018

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடினும் மக்கள் எமக்கு அதிகப்படியான வாக்குகளை வழங்கி அதிக உறுப்புரிமையை தந்துள்ளார்கள். அந்தவகையில் நாம் எமக்கு கிடைக்கப்பெற்ற அந்த அரசியல் பலத்தைக்கொண்டு மக்களுக்கான  செயற்றிட்டங்களை  முன்கொண்டுசெல்ல வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்(24) நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள், மற்றும் உதவி நிர்வாக செயலாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கிடைக்கப்பெற்ற உள்ளூராட்டசி மன்ற அதிகாரங்களைக்கொண்டு நாம் எமது மக்களின் அவிலாஷைகளை மதித்து அதனை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமன்றி கட்சியூடான செயற்றிட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும்.

அந்தவகையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொண்டதை விட பன்மடங்கு உத்வேகத்துடன் இனிவரும் காலங்களில்  நாம் எமது வெற்றிக்காகவும் மக்களின் வெற்றிக்காகவும் வீரியமுடன் உழைக்கவேண்டும் என்றும்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் மற்றும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் புரட்சிமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:

நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் - புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் ...