மக்களின் உரிமைகளுக்காய் நாம் என்றும் குரல்கொடுப்போம் -துன்னாலையில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 26th, 2017

நம்பிக்கையின் அடிப்படையில் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆதரவும் ஒத்துளைப்பும் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடமராட்சி, துன்னாலைப் பகுதி மக்களை கலிகை கந்தசுவாமி கோவில் முன்றலில் இன்றையதினம் (26)  சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே  டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அழிவு யுத்தம் முடிந்துள்ள இச்சூழலில் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதகம் ஏற்படும் சந்தர்ப்பங்களுக்கோ வாய்ப்புக்களுக்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமோட்டோம்.

யுத்தத்தால் துவண்டுபோன எமது மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் நிச்சயமாக அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நாம் என்றுமே தயாராக இருக்கின்றோம்.

எவ்விதமான சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து மக்களின் நலன்களை முன்னிறுத்தியதான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயங்கவோ அன்றிப் பின்நிற்கப்போவதோ இல்லை.

கடந்தகாலங்களில் எமது மக்களின் வளமான எதிர்காலத்திற்காக நாம் பல அர்ப்பணிப்புள்ள சேவைகளை முன்னெடுத்திருந்தது மட்டுமன்றி மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் செயல்ப்படத்திக் காட்டியுள்ளோம்.

தமது சுயலாப அரசியலுக்காக மக்களை அடகுவைக்கும் ஏனைய தமிழ் அரசியல்க் கட்சிகளைப்போல் அல்லாது எமது கட்சியின் கொள்கை வழிநின்று அந்த மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைப்பதற்கு நாம் என்றும் தயாராக இருக்கின்றோம்.

அந்தவகையில்தான் துன்னாலைப் பகுதி மக்களாகிய நீங்கள் இன்று எதிர்கொண்டுள்ள இடர்பாடுகளுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடனான எமது உழைப்பை நிச்சயம் ஆற்றுவோம். அதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் எமக்கு முக்கிய தேவைப்பாடாக உள்ளது.

அதை உணர்ந்துகொண்டவர்களாக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவை எமக்குத் தரும்பட்சத்தில் நிச்சயம் நாம் இயல்புச் சூழலை பெற்றுத்தருவதுடன் உங்கள் வாழ்வை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கு நாம் நிச்சயம் பாடுபடுவோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தவநாதன், கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் வடமராட்சி தென்மராட்சி பிரதேசங்களின் நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் திலக், உள்ளிட்டோர் உடனிருந்தனர்

Related posts:


நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் - முல்லைத்தீவு மக்கள் பிர...
புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.
யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!