மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 16th, 2016

அடுத்த வருடம் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வகிபாகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இவ் விசேட  கலந்தரையாடல் நேற்றையதினம் நடைபெற்றது.

அடுத்தவருடம் நடைபெறவுள்ளதான உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் வட்டார ரீதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தயார்ப்படுத்தல்களை முற்கூட்டியே மேற்கொள்ளப்படவேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் வேட்பாளர்களின் தெரிவு பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா யுத்தகாலத்திலும் சரி யுத்த காலத்துக்கு பின்னரான காலத்திலும் சரி நாம் மக்களுடன் நின்று மக்களுக்காகவே பணியாற்றிவருகின்றோம். அதிலும் குறிப்பாக யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையிலான செயற்றிட்டங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்த அதே வேளை பல்வேறுபட்ட அபிவிருத்திகளையும் முன்னெடுத்திருந்தோம்.

அந்த வகையில் மக்களின் வழ்வாதார பொருளாதார மேம்பாட்டுக்காகவும் அபிவிருத்திக்காகவும் அயராது பாடுபட்டவர்கள் என்ற பெருமையை நாமே கொண்டிருக்கின்றோமே தவிர வேறு எவரும் இதற்கு உரிமை கூறவோ பங்கு கொள்ளவோ முடியாது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் மக்களின்  நம்பிக்கையை மேலும் பெற்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களில் வெற்றிபெற்று மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூண்டு அதற்காக ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்து அவசியமானது என்பதையும் இங்கு வலியுறுத்த விருபுகின்றேன்.

பழிச்சொற்களையும் அவமானங்களையும் தாங்கி எமது மக்களி அரசியல் அபிலாசைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான உரிமைகளையும் எமது கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாட்டுக்கு அமைய முன்னெடுத்து இலட்சியப்பயணத்தில் பயணித்து நிச்சயம் வெற்றிகாண்போம் என்ற மனோதிடத்தை ஆதாரமாக கொண்டு செயற்படுவோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிததிருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் நிர்வாக செயலாளர்கள் மற்றும் பிரதேச நிர்வாக செயலாளர்கள் உறுப்பினர்களுடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF1078

Related posts: