சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த விசேட நடவடிக்கை – தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!.

Saturday, February 3rd, 2024


……
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவுகள் ஊடக விளிப்பு குழுக்களை அமைத்து பொலிசாரின் ஒத்துழைப்போடு  நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தென்மராட்சி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற வேளை பொதுமக்கள் பிரதிநிதிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் போதே அமைச்சர் மேற்கொண்ட கருத்தினை தெரிவித்தார்.

அத்தோடு  குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், மற்றும் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினந்தோறும்  எதிர்கொண்டு வருவதாகவும் இதை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்திய அமைச்சர் குரங்குகளால் ஏற்படுத்தும் இடையூறுகளை தீர்க்கவும், குரங்குகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்த வாயு துப்பாக்கியை பெற்றுக்கொடுக்க உரிய  நடவடிக்கை எடுக்க ஆலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts: