“எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றேன்” – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதனூடாக வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரம் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வியலிலும் சிறந்த பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை தன்னிடம் உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரியாலை பிரதேசத்திற்கு இன்று விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய் லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன் குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்தடன், அரியாலை பிரதேசத்தில் கடலட்டை பண்ணை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களைப் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நான் எமது மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலேயே அக்கறையாக உள்ளேன். அதற்காக எனக்கு கிடைக்கின்ற வளங்களைம் சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்துவதில் முழு அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றேன்.

அதன் தொடர்ச்சியாகத்தான் வடக்கில் நலிந்துகிடக்கும் எமது கடற்றொழிலாளர்களின் நலன்கருதி பெரும் பொருளாதாரத்தை ஈட்டக் கூடிய கடலட்டை வளர்ப்பு பண்ணைகளை பொருத்தமான இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன்.

அதுமாத்திரமன்றி கடலட்டை தொடர்பான புரிதலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் எமது துறைசார் அதிகாரிகளை ஈடுபடுத்துவது மாத்திரமன்றி,  நானும் நேரடியாகச் சென்று பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றேன்.

குறிப்பாக இவ்வாறான கடலட்டை பண்ணைகளை அமைப்பதனால் பாரம்பரிய தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எமது கடற்றொழிலாளர்களிடம் காணப்படுகின்றது.

ஆனால் நான் எமது கடற்றொழிலாளர்களின் நலன்கள் பாதிக்கப்படுவதையோ அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இது எமது மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்நிலையில் தற்போது குடாநாட்டின் பல பாகங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாதகமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

எனவே, வெளிப்படைத் தன்மையுடன் எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:

E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு - புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியி...