தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Monday, April 22nd, 2024

அரசாங்கத்தினால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவசக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை சேர்ந்த பேராசிரியர்களான ஐங்கரன், மனோரஞ்சன்  மற்றும் அகிலன் கதிர்காமர் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

தெல்லிப்பழை, மகாஜனாக் கல்லூரி சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கல்லூரியின் வினைத்திறனான செயற்பாடுகளை விஸ்தரித்தல் மற்றும் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவை தொடர்பாக கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந...
நிலைமாற்று நீதியை நிலைநாட்டுவது அரசின் கடப்பாடாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!