பூர்வீக காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 27th, 2022


வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள  பூர்வீகக் காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த ஆலயத்தினை சூழவுள்ள சுமார் 600 ஏக்கர் காணி, நியாயமான காரணங்கள் ஏதுமற்ற நிலையில் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ரெிவித்த பரிபாலன சபையினர், குறித்த காணி விடுவிக்கப்படுமாயின் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியமர முடியும் எனவும் தெரிவித்தனர்.

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் கணிசமானளவு காணிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.  – 27.09.2022

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!
மகளிர் கடற்றொழில் அமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்...
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு - காலம் தாழ்த்தாது செயலில் இறங்க...