அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு – காலம் தாழ்த்தாது செயலில் இறங்குமாறு புத்திஜீவிகள், மதப் பெரியார்கள், அரசியல் விமர்சகர்கள், சமூக அமைப்புக்கள் அழைப்பு!

Monday, August 29th, 2022

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு உயர் குழுவை அமைத்து, அதன் மூலம் ஒரு தீர்மானத்தை எடுத்து தமிழ் மக்களுக்கு அது குறித்து விளக்கமூட்டி அதனை அரசாங்கத்தின் முன்பாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இவர்கள் அனைத்து தமிழ் கட்சிகளின் தலைமைகளையும் கேட்டுள்ளனர்.

வெளிநாட்டு தூதுவர்களை மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை தனித்தனியே அல்லது குழுக்களாக தமிழ் கட்சிகள் சில சந்தித்து பேசி வருவதால் எந்த பலனும் இல்லை. அவை வெறுமனே ஊடகங்களுக்கு செய்திகளாக மட்டுமே பிரயோசனப்படுத்தப்படும்.

யுத்த காலத்திலும் சரி யுத்தம் முடிவடைந்த கடந்த 10 வருட காலத்திலும் இந்த நிலைமையைத்தான் நாங்கள் கண்டு வருகின்றோம்

இது தமிழ் கட்சிகள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயலாகவே நோக்கப்படுகிறது. இனியும் இந்தப் பருப்பு வேகாது எனும் அளவுக்கு தமிழ் மக்கள் இத்தகைய விடயங்களில் வெறுத்துப் போய் உள்ளனர்.

ஆகவே இந்த பொய்யான பரப்புரைகளை விடுத்து தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து புதிய வேலை திட்டத்தில் இறங்க வேண்டும். அது அமைச்சர் தேவானந்தா தலைமையில்தான் இருக்க வேண்டுமென்று இல்லை.

அவரையும் இணைத்து எல்லோரும் இணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த ஒரு தீர்வு கிட்டுமென தெரிவித்துள்ள புத்திஜீவிகள் பலரும், அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பமாக தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கிறார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வல...
கரைவலை பிரச்சினைக்கு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் தீர்வு - "வின்ஞ்" பயன்படுத்த அமை...