சமூக சேவையாளர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 17th, 2019

நாமல் ஜீவானந்தா நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூக சேவையாளர்களுக்கான விருது வழங்கல் விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து சமூக சேவையில் தம்மை அர்ப்பணித்து செயற்பட்டுவரும் ஒரு தொகுதியினருக்கு கௌரவ கலாநிதி பட்டத்திற்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

தெல்லிப்பளை இராஜராஜேஸ்வரி மண்டபத்தில் நேற்றையதினம் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் 30 க்கும்  மேற்பட்ட சமூக சேவையாளர்களுக்கு கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ்களை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வழங்கி கௌரவித்தார்.

நாமல் ஜீவானந்தா நிறுவனமானது சமூக நலன்புரிச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக தலைவர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பலர் துறைசார் வல்லுநர்களை ஒன்றிணைத்து இப்பணியில் ஈடுபட்டுவருவதுடன் வளர்ந்துவரும் இளைய சமூகத்தை சமூகப் பணிகளில் ஊக்குவிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம், ஜனநாயகம் நிலைத்தல், குழந்தைகள், சிறுவர்கள், பெண்களது பொதுவாக மனித அடிப்படை உரிமைகளையும் சேவைகளையும் அடையச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதுடன் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும் இளைஞர்களின் திறன் விருத்தி தொழில் வசதி கல்வி, கலாசார விடயங்களை பாதுகாத்தல் மற்றும் தீர்வுகளை காணுதல் போன்ற சேவைகளில் இந்நிறுவனம் உழைத்துவருகின்றது.

அந்தவகையில் இச்சமூகசேவைகளில் முன்னின்று உழைப்பவர்களைக் கௌரவிக்கும் முகமாக குறித்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிழ்வில் தென்னிந்திய கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்டம் ஆரம்பம்!
கிளிநொச்சியில் சமூகப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான கலந்துரையாடலில் ...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் தி...