புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

Friday, July 31st, 2020

வாழ்கை செலவிற்கு ஏற்ற ஊதியம் – ஊதியத்திற்கு ஏற்ற வாழ்கை தரம், என்ற நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மானிப்பாயில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எமது மககள் மத்தியில் காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வுகளை நீக்கி புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் அனுபவிப்பதைப் போன்ற வளமான வாழ்கையை ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், புலம்பெயர் தேசங்களின் தரத்திலான வாழ்கையினை உருவாக்கப்படுகின்ற பட்சத்தில், எமது மக்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்ற புலம்பெயர் நாடுகள் நோக்கி பயணிக்கும் ஆர்வம் குறையும் எனவும் அதனூடாக எமது தேசத்தின் இனப் பரம்பல் ஸ்திரமாக பேணப்பட்டு போதுமான அதிகார பலத்தை தக்க வைக்கக் கூடிய நிலையை உறுதிப்படுத்துவதும் தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்

Related posts:

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெர...
மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு...
வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

இனப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் சம்பந்தன் விரும்புகின்றாரா? -  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்...