புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு – பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, December 27th, 2021

வேலணை – புங்குடுதீவிற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீ முருகன் கிராமிய அமைப்பின் மண்டபத்தில் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாலிலும் கலந்து கொண்டார்.

இதன்போது சுமார் 88 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், பெரும்பாலானவர்கள் கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில், வாழ்வாதார உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் புங்குடுதீவு, மடத்துவெளி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய, குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு பொருத்தமான கடல் பிரதேசத்தினை பார்வையிட்டதுடன், தைப் பொங்கலுக்குப் பின்னர் கடல் பண்ணை அமைக்கும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புங்குடுதீவு, கேரதீவிற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் சுமார் 33 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற கேரதீவிற்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், பேருந்து சேவை ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்க்கையையும் மேற்கொண்டார்.

இதனிடையே புங்குடுதீவு, இறுப்பிட்டி கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஐங்கரன் சனசமூக நிலையத்தில் பிரதேச மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

இதன்போது பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெரும்பாலான கடற்றொழிலை ஜீவனோபாயமாக கொண்ட மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருவதால், கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துமாறு தெரிவித்தார்.

மேலும், காணிகள் இல்லாதவர்களுக்கு அரச காணிகளைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!
யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு கடல் பரப்பில் இருந்துவந்த கட்டுப்பாடுகளே இந்திய ரோலர் தொழிலாளர்களுக்...
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...