பிரதேசவாத பிரிவினைகளை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை – மட்டு. மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா

பிரதேச வாதத்தையோ அன்றி பிரிவினைகளை உருவாக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கு நாம் என்றும் துணைபோனது கிடையாது. அத்தகைய சூழ்நிலைகள் எதிர்காலங்களில் உருவாகுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் திருகோணமலையில் டக்ளஸ் தேவானந்தாவை இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தள்ளார்
கடந்தகால யுத்தம் எமது மக்களை முழுமையாக ஏதிலிகளாக்கிவிட்டது. யுத்தம் தந்த வலிகளிலிருந்து விடுபட்டுவரும் எமது மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தேவைகளை பெற்றுக்கொடுக்கவேண்டியவர்கள் பாராமுகமாக இருப்பது குறித்து நான் வேதனை அடைகின்றேன்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் தமிழ் மக்களது வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்தை அலங்கரிப்பவர்கள் மக்களது அபிலாஷைகளை மறந்து தமது சுகபோக வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைப்பாட்டை இன்று மக்கள் தெளிவடைந்துள்ள நிலையில் பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.
மக்களது இந்த தெளிவானது இனிவரும் காலங்களில் ஒரு தெளிவான அரசியல் தலைமையை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு கொடுத்துள்ளது மட்டுமல்லாது இன்றுவரை தமிழ் மக்கள் அனுபவித்துவரும் தீராப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான களத்தையும் உருவாக்கிக்கொள்ளும் சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
தவறான அரசியல் தலைவர்களை தெரிவு செய்துவிட்டு தமது தேவைகள் எதுவும் தீர்த்துவைக்கப்படவில்லை என மக்கள் அந்த தலைவர்களை குறைகூறிக்கொண்டிருப்பதை விட மக்கள் தமக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் தலைமைகளை இனிவரும் காலங்களில் தெரிவுசெய்து அதனூடாக உச்ச பயன்களை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
மக்களது நலன்களை வென்றெடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் அயராது பாடுபட்டுவரும் எமது பாதைநோக்கி நீங்கள் ஒவ்வொருவரும் அணிதிரண்டு வருவீர்களேயானால் நாமும் உங்களுடன் இணைந்து மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்
இதன்போது கட்சியின் ஜேர்மன் அமைப்பாளர் மாட்டின் ஜெயா உடனிருந்தார்.
Related posts:
|
|