ஏழைகளின் வாழ்வுக்கு கரம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா –  சுப்பர்மடம் கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு!

Monday, April 24th, 2017

மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வுகாண்பதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் உழைத்துவருபவரும், அல்லல்ப்படும் மக்களுக்கு வேண்டிய நேரத்தில் அபயக்கரம் நீட்டுபவரும் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என பருத்தித்துறை நகர கடற்றொழிலயாழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறை நகர கடற்றொழிலாளர்  சங்க வளாகத்தில் இன்றையதினம்(24) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கடற்றொழிலாளகளின் குறைகேள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

கடற்றொழிலாளர்களான நாம் நாளாந்தம் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டு வருவதை யாவரும் அறிவர்.  அவ்வேளைகளில் எல்லாம் எமது பிரச்சினைகளை அறிந்துகொண்டு அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக தாமாகவே முன்வந்து தீர்வுகளையும் டக்ளஸ் தேவானந்தா பெற்றுத்தந்திருக்கின்றார்.

ஆனால் நாம் வாக்களித்தால், வெற்றியை தமதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எங்களது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாது ஏமாற்றி தமது சுயநலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வருவதையும் நாம் யாவரும் நன்கறிவோம்.

அந்தவகையில் கடந்தகாலங்களில் இடர்பாடுகள் நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நிகர் டக்ளஸ் தேவானந்தாவே என்று வெளிப்படையாக கூறமுடியும்.

எனவே கடந்தகால மக்களுக்கான அவரது சேவைகள் எதிர்காலத்திலும் தொடரப்பட வேண்டும்.

எமது கடற்றொழிலர் கூட்டுறவு சங்கத்திற்கு  ஒரு நிரந்தரமான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு அவரது பங்கு அளப்பெரியது. எமது சங்கத்தினதும் எமது மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்காகவும் அவர் பல்வேறு சேவைகளை நல்கியுள்ளார்.

எமது பகுதியில் இன்று துறைமுகம் அமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தால். கடற்றொழிலாளர்களாகிய நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள இருக்கும் இடர்பாடுகளுக்கு உரிய தீர்வுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது மக்களால் தெரிவிக்கப்பட்டது.

மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் பிரான்சிஸ் ரட்ணகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர நிர்வாக செயலாளர் திருமதி இந்திரன் கைலாயினி பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோருடன் கடற்றொழிலாளர்கள் பலரும் கலந்தகொண்டிருந்தனர்.

Related posts:


புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி ...