பான் கீ மூனை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை(02) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது சபாநாயகர் கருஜயசூரிய அவைத் தலைவர் லக்ஷமன் கிரியெல்ல, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது வலி வடக்கு மக்களது மீள் குடியேற்றம் காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை வடபகுதி மக்களது அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐ.நா.பொதுச்செயலாளரிடம் எடுத்துக்கூறியிருந்தார்.
மேலும் அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டமூலங்கள், நாடாளுமன்றத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழு போன்றன தொடர்பில் குறித்த குழுவினர் எடுத்துக் கூறியுள்ளனர்.
Related posts:
|
|