பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!
Thursday, April 18th, 2024
யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் – நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதாக பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காகவும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இன்நிலையிலேயே குறித்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் த...
ஊர்காவற்றுறையில் கடற்றொழில்சார் பயனாளர்களுக்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்...
|
|