பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுவழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 30th, 2024


பாசையூர் புனித அந்தோனியர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்று முற்பகல் (30.03.2024)வருகைதந்த குறித்த சங்கத்தின் தலைவர், பொருலாளர், செயலாளர் ஆகியோரே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது அவர்கள் தெரிவிக்கையில் – 

தமது பகுதி தொழில் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையம்  ஒன்று அமைக்கப்படவேண்டுயது அவசியமாக உள்ளது.

அதேபோன்று களங்கண்டி வலைகுத்தும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடிகள் பெற்றுக்கொள்வதும் பிரச்சினையாக இருக்கின்றது.

எனவே நாம் எதிர்கொள்ளும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு கோருகின்றோம்.

அதுமடுமல்லாது இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்தவதற்கான உபகரணங்களையும் பெற்றுத்தருமாறும் கோரியுள்ளனர்

குறித்த சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் அது தொடர்பில்    நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

இலங்கையின் மிக உயரமான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சிற்பத் தேர் கட்டுமாணங்களை செயலாளர் நாயகம் ட...
தேசிய பாதுகாப்பு தெரு நாடகமானால் முதலீட்டாளர்கள் திரும்பியும் பார்க்கமாட்டார்கள் - டக்ளஸ் எம்.பி. நா...
தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் தீர்வு காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி ஆர்வமுடன...