பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிழக்கி்ன் ஆளுநர்!

Wednesday, March 6th, 2024

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் (06.03.2024) மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின்பொது திருமலையிலுள்ள பொது மீன் சந்தை, கின்னியா மீன் சந்தை தொடர்பான  விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படுள்ளது.

மேலும் மட்டக்களப்பு வட்டவான்,  கொக்கடிச் சோலை ஆகிய இடங்களில் இறால் பண்ணைகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திருகோணமலை நகரசபைச் செயலாளர் மற்றும் கிண்ணியா நகரசபைச் செயலாளர் ஆகியோர் அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!
தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...