பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் – மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை!

Wednesday, February 2nd, 2022

மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் முழுமையான கவனத்தை செலுத்தி, எதிர்காலத்தில் தமிழர் தேசத்தை வழிநடத்தும் அறிவுஜீவிகளாக திகழ வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் செங்குந்தா இந்துக் கல்லூரியின் மைதான பெயர் பலகை திரை நீக்கம் மற்றும் பொங்கல் விழாவிற்கு இன்று 02.02.2022) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், “இத்தகைய பாரம்பரிய பண்பாட்டு திருநாளை செங்குந்த இந்துக்கலூரி சமூகத்தினர்

கொண்டாடுவதையிட்டு நான் மனம் மகிழ்ந்து வரவேற்கின்றேன்.

பயிர்களின் விளைச்சலை மட்டும் அறுவடை செய்தால் போதாது. தாம் கற்ற கல்வியின் விளைச்சலையும் எமது மாணவக் கண்மணிகள் அறுவடை செய்ய வேண்டும்.

குறிப்பாக கல்விமான்களாகவும் தமிழர் தேசத்தை வழிநடத்தும்  அறிவுஜீவிகளாகவும் சமகால மாணவக் கண்மணிகள் எதிர் காலத்தில் திகழ வேண்டும். பெற்றோர்களுக்கும் தமிழர் தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

சிறுபிள்ளை வேளாண்மை விளையும் வீடு வந்து சேராது என்பார்கள்,

அது போலவே அரசியலிலும் வீடு வந்து சேராதவைகளே சிலரால் இன்னமும் விதைக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
இலங்கை – இந்திய எல்லை தாண்டிய கடற்றொழிலாளர் விவகாரம்: இருநாட்டு கடற்றொழிலாளர்களது நலன்களும் பாதுகா...

கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு - ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த...