பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்கள் குழம்ப தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 31st, 2023

பூநகரி – மன்னார் வீதியில் பல்லவன்கட்டு பகுதியில் கடைத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளை பகிர்வது உட்பட அனைத்து அரச காணிகளும் பகிரப்படும் போது பிரதேச மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் இன்று(31.03.2023) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பூநகரி, நாகபடுவான் – பல்லவராயன்கட்டு பகுதி மக்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

“மக்களால் முன்வைக்கப்பட்ட காணி, குடிநீர், மின்சாரம், விளையாட்டு மைதானப் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு பல விடயங்களுக்கு தீர்வுகாணப்பட்டதுடன் சில விடயங்கள் தொடர்பாக கால அவகாசம் கேட்டிருக்கிறேன். அவை விரைவில் செய்து முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “புதிதாக உருவாக்கப்படுகின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டமாகவே இருக்கும். இதுதொடர்பான சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து வாதப்பிரதி வாதங்களின் பின்னரே சட்டமாக அறிவிக்கப்படும். எனவே குறித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாக மக்கள் குழப்பமடைய தேவையில்லை” எனவும் தெரிவித்தார்.

  • 31.03.2023

Related posts:

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவா...
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்ச...
நெருக்கடிகளிலிருந்து இலங்கையர்களாகிய நாம் விரைவில் மீண்டெழுவோம் - சித்திரைப் பெருநாள் வாழ்த்துச் செய...

வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
மாதகல் பிரதேச மீன்பிடி இறங்கு துறைகளை புனரமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!