பனைசார் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ் மாவட்ட சமாசம் கோரிக்கை!

Friday, May 22nd, 2020

மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி கொடுத்திருந்த நிலையிலும் கள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி அழிக்காதிருந்த நிலையில் அத்தொழிலை முன்னெடுக்கும் தொழிலாளர்களின் நலன்கருதி கள் விற்பனை நிலையங்களை சில வரையறைகளுடன் திறப்பதற்கு அனுமதி எடுத்து தந்தமையானது அத்தொழிலை முன்னெடுக்கும் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றது என யாழ் மாவட்ட பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த குறித்த சங்கங்களின் யாழ் மாவட்ட நிர்வாக பிரதிநிதிகள் தாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக கொரோனா காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் கள் இறக்கும் தொழிலை மேற்கொண்டு தமது குடும்ப வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.

ஆனாலும் கொரோனா அனர்த்த நேரங்களில் மூடப்பட்ட பல கள் விற்பனை நிலையங்கள் இன்னமும் திறக்க அனுமதி வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. அவற்றை மீளவும் திறப்பதற்க நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு கோரியதுடன் சில அரசியல்வாதிகளின் சுயநலங்களுக்காக மூடப்பட்ட 3 கள் விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கும் அனுமதியை பெற்றுத்தருமாறும் கோரியிருந்தனர்.

மேலும் கொரோனா தொற்று காலப்பகுதியில் செலத்தப்பட வேண்டிய வரி தொடர்பிலும் நியாயமான நிலைப்பாட்டை பெற்றுத்தருவதற்கும் அரமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் திக்கம் வடிசாலை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அடைப்புக் கள் உற்பத்திக்கு அறவிடப்படும் வரியை அதாவது ஒரு போத்தலுக்கு 50 ரூபா என்ற வரி அறவீட்டை குறைத்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

குறித்த சங்கங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் துறைசார் தரப்பினருடன் பேசி தீர்வுகளை பெற்றுத்தர நடடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: