பனம் தொழில் துறை சார்ந்த மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – அல்லைப்பிட்டி மக்கள் சுட்டிக்காட்டு!
Sunday, January 28th, 2018
பனம் தொழில் துறை சார்ந்த எம்மை யாரும் திரும்பிப் பார்த்திராத நிலையில் எமது உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தாங்களாற்றிய பணிகளை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என அல்லைப்பிட்டி பனம் துறைசார்ந்த தொழிலாழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்ட அல்லைப்பிட்டி பகுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தளவில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பனம் தொழில் சார்ந்த வல்லுநர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் நீங்கள் அமைச்சராக இருந்த போது பனை அபிவிருத்திச் சபையும் உங்களது கட்டுப்பாட்டின் கீழ் நேரடி வழிகாட்டலில் இருந்துவந்தது .
அக்காலத்தில் எமது வாழ்வும் ஒளிபெற்றுச் சிறந்திருந்தது. அனால் தற்போது எமது நிலைமைகளை யாரும் அவதானம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
அந்தவகையில் எம்மை எல்லாத் தரப்பினரும் கைவிட்டிருந்த நிலையில் எமக்கு ஆறுதல் தந்த எமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து எமது வாழ்வில் வழிகாட்டடியா நீங்களே இருந்துவருகின்றீர்கள்.
அத்துடன் எமது தொழிலை செய்யமுடியாது என அரசு வர்த்மானி மூலம் அறிவித்தல் விடுத்திருந்த போது உடனடியாகவே அதை தடுத்து நிறுத்தி தொடர்ச்சியாக எமது தொழில் துறைக்கு ஆதரவு வழங்கிய உங்களது ஆழுமையை பனம் தொழில் துறைசார்ந்தவர்களாகிய நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நாம் உள்ளூராட்சி சபை தேர்தலை மட்டுமல்லாது வடக்கு மாகாணசபையையும் வென்றெடுக்கும் பட்சத்தில் உரிய தீர்வுகளை பெற்றுத் தருவோம் என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|





