தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, May 11th, 2017
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 597 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் இச் சந்தர்ப்பத்தில் சாத்தியமாகியிருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியின் அவதானத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எமது நாட்டில் இம்முறை வெசாக் பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மறைந்த எமது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களது முயற்சியின் காரணமாக ஐக்கிய நாடுகளின் 14 வது சர்வதேச வெசாக் தினமாக இம்முறை வெசாக் பண்டிகை அமையப் பெற்றிருப்பதுடன், இதன் ஆரம்ப தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்கிறார். இத்தகையவர்களது பங்களிப்புகளுடன் கொண்டாடப்படுகின்ற இந்த வெசாக் பண்டிகையை முன்னிட்டு, 597 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து இத் தினத்தை மேலும் அர்த்தமுள்ளாதாக்கியிருக்க முடியும்.
அவ்வாறானதொரு நடவடிக்கை தங்களால் செயற்படுத்தப்பட்டிருந்தால், அது தாங்கள் பொறுப்பு வகிக்கின்ற தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு வலுவானதொரு நிலையை எமது மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கும் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் வடமாராட்சி வடக்கு மற்றும் வடம...
வீதி விபத்துக்கள் மற்றும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் இறுக்கமான நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்...

காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள்  - டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்க...
தமிழ், இந்து சமய பாடநூல்கள் தொடர்பில் ஆக்க மற்றும் ஆலோசனைக் குழுக்கள் அமைப்பதற்கு தீர்மானம்!
கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...