பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டு!

பூநகரி, கிராஞ்சி – இலவன்குடா பகுதியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அனைத்து தொழில் முறைகளும் சட்ட ரீதியானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இலவன்குடா பகுதி உட்பட பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பட்டி வலைகள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும், குறித்த தொழில் முறையை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் நலன் கருதி பட்டி வலை தொடர்பா நெகிழ்வுப் போக்குடன், தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, கடலட்டைப் பண்ணைகளுக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை என்றும், தமது தொழிலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பண்ணைகளை அமைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், போட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை கோரிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார். – 07.01.2023
Related posts:
|
|