பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Wednesday, September 9th, 2020

பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அம்பாலாங்கொடை பிரதேச கடற்றொழிலாளர்கள் 24 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று நம்பிக்கை வெளியிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி நான்கு பல நாள் மீன்பிடி கலங்களில் தொழிலுக்கு சென்ற சுமார் 24 கடற்றொழிலாளர்கள் தவறுதலாக எல்லைத் தாண்டி பங்களாதேஷ் கடற்பரப்பினுள் சென்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் உறவினர்கள் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை முன்வைத்த நிலையிலேயே அமைச்சரினால் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

Related posts:

சுயலாப அரசியல்வாதிகளுக்கு உயிர்த்தஞாயிறு குண்டுவெடிப்புகள் மகிழ்ச்சியே – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை - சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள்...
களப்பு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டநிதியை ஏன் உரிய முறையில்; பயன்படுத்த வில்லை நாரா அதிகாரிகளிடம் அ...