வறுத்லைவிளான் மற்றும் மயிலிட்டி துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, July 14th, 2017

வலிகாமம் வடக்கு வறுத்லைவிளான் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்த அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமாணப்பணிகளை பார்வையிட்ட அதே நேரம் மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாகவம் கேட்டறிந்தகொண்டார்.

இப்பபகுதியில் 30 குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுமாணப் பணிகளில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர். குடும்பத்திற்கு இரண்டு பரப்பு வீதம் அங்கு காணிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் உடுவில் மதவடி நலன்புரி நிலையம், உடுவில் கண்ணகி நலன்புரி நிலையம் ஆகிய நலன்புரி நிலையங்களைச் சேர்ந்த 30 குடும்பங்கள் இங்கு மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வாழ்வாதாரம், குடிநீர், மலசலகூடம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் அவசியம் தொடர்பாக மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இங்கு தையிட்டி, பலாலி, கிராமக்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களே மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்

அத்துடன் கீரிமலை கூவில் பகுதி மக்களைச் சந்தித்து அவர்களது தேவைப்பாடுகள் தொடர்பாகவும் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்துகொண்டார். இதனிடையே இம்மாதம் 3 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகத்திற்கும் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலளார் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), கட்சியின் வலிகாமம் வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) உடனிருந்தனர்.

Related posts:

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் -...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவா...
கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார...

எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...
நியாய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய பல்பொருள் அங்காடி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கடற்றொழி...