நெருக்கடியானநேரத்திலும் நெருக்கமாக இருந்த தோழர் சந்திரமோகன் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்!

Saturday, December 5th, 2015

ஈழவிடுதலைப் போராட்டத்தின் மூத்தபோராளியை ஈழ மக்களும் தோழர்களாகிய நாங்களும் இழந்துவிட்டோம். மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியோடு உண்மையாகவும் உறுதியாகவும், சிறந்த ஆலோசனை வழங்கும் தோழனாகவும் செயற்பட்ட தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இன்று (05.07.2016) காலமான தோழர் சந்திரமோகன் நீண்டநாட்களாக உடல் சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்தார். நேற்றையதினமும் ( 04.07.2016) வைத்தியசாலைக்குச் சென்று தோழர் சந்திரமோகன் அவர்களுக்குஆறுதல் கூறிவந்ததை செயலாளர் நாயகம் அவர்கள் மிகுந்த வேதனையோடு நினைவுபடுத்தியதுடன் தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்புக் குறித்து தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எழுபதுகளில் ஈழ விடுதலை இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவராக இருந்த திரு. சந்திரமோகன் போராட்டம் பற்றிய உணர்வுகளை உணர்ச்சியோடு பேசுவதில் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார். எத்தனை பேர் இருந்தாலும் தனித்துவமான அவர் குரல் எப்போதும் கம்பீரத்தோடுஒலித்ததை நினைத்துப்பார்க்கின்றேன்.

25dd6bdf-49a2-47f4-a566-a01a6832e5f5

யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் நாராயணலிங்கம் சந்திரமோகன் அவர்கள் 1956ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி பிறந்தார்.

விடுதலைவேட்கையை அச்சேற்றி எரிமலை பத்திரிகையாக ஏந்தித்திரிந்து பரப்புரை செய்ததும், ஆரம்பகால ஈழ விடுதலை இயக்கத்தின் (ஈ.எல்.ஒ) தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்ததுடன் ஈழ மக்களின் விடுதலையை பெரிதும் விரும்பியவராகவும் வாழ்ந்தார். அத்துடன் விடுதலைப் போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்காக தடவைகள் சிறை சென்றது மட்டுமன்றி, நெருக்கடிகளையும் பலசவால்களையும் சந்தித்திருந்தார்.

அவரின் துணைவியார் திருமதி.கலாநந்தி அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவரது மகள் ஐஸ்வர்யா மற்றும் மகன் ஐஸ்வரன் இருவமே தனது உலகமென்று வாழந்து வந்திருந்தார். தோழர் சந்திரமோகன் அவர்களின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது பிள்ளைகளினதும்,உற்றார் உறவினர்களினதும் துயரத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: