நீர்வேளாண்மை திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!
 Sunday, August 14th, 2022
        
                    Sunday, August 14th, 2022
            
நீர்வேளாண்மை எனப்படும் நன்னீர் மீன் வளர்ப்பு, பண்ணை முறையில் ஏற்றுமதித் தரத்திலான கடலட்டை, கொடுவா மீன், இறால் மற்றும் நண்டு வளர்ப்பை விருத்தி செய்வதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த வேலைத் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் வார விடுமுறையான இன்று நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தினை அமைச்சு அலுவலகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடினார். –
இதேவேளை மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ந.குமரகுருபரன் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கடற்றொழில் சார் தொழில் துறைகளில் தனியார் முதலீட்டாளர்களுக்கான சாத்தியங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதன்போது, கடற்றொழில் மற்றும் கடற்றொழில் சார்பான தொழில் துறைகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனியார் முதலீட்டாளர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்ட, மோதரையில் உள்ள மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இறங்குதுறைப் பகுதியை மீளப்பெற்றுக் கொள்ளுதல் மற்றும் நிலுவைத் தொகையினை அறவிடுதல் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று ஆராயப்பட்டது.
அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் அமைச்சரின் சட்ட ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி நஜீம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        