நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!

Sunday, February 16th, 2020

கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை ஊருவாக்கவது தொடர்பான அங்குரார்ப்பண வைப்வம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை தேசிய நீர்வாழ் உயிர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் நடைபெறும் இந்த திட்டம் நடைபெறவுள்ளது.

 யாழ் மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்கள் பலசெயற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கடல்சார் தொழிற்துறையை அண்டி வாழும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை மையப்படுத்தி அபிவிருத்தி திட்டம் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலைமையே காணப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைசை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக இக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தாவின் இத்தகைய எண்ணக் கருவை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை பிரிவு ஆரம்பித்துள்ளது.

இதனிடையே இத்தரிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமங்கள் தோறும் மகளிர் குழுக்கள் அமைக்பப்பட்டு இவர்களுக்கு கடல் மற்றும் நன்நீர்சார் தொழிற்துறைகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

குறித்த பயிற்சி முடிவில் சான்றிதழுடன் தொழில் உபகரணங்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே திட்டத்தின் நோக்கமாகும்.

நிலையில் நாளை17ஆந் திகதி பயிற்சிப் பட்டறை அங்குராபண நிகழ்வு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குருநகர் சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் செயற்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் ஆரம்பநிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுகக் ப்பட்ட 100 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. கடல்சாh,; நீர்வள உயிரின வளாப்பு மற்றும் உணவு பதனிடல் போன்ற துறைகளில் 18 முதல் 20ஆம் திகதிவரை காலை 9மணி முதல் 4 மணி வரை முழுநேரமாக இப் பயிற்சிப்பட்டறை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமையின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜா பயிற்சியை வழிநடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: