மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் – அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, April 3rd, 2021

அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி ஆழ்மன துயரை தந்துள்ளது என தெரிவித்துள்ளது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா இருண்டு கிடந்த எம் தமிழர் தேசத்தில் ஆன்மீக வெளிச்சமாக தோன்றியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை மரிய சேவியர் அடிகளாரின் இழப்புச்செய்தி குறித்து விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஆன்மீக வழிகாட்டியாக, ஒரு அருட்தந்தையாக மட்டுமன்றி, மதங்களை கடந்து சகல மக்களையும் ஆழ நேசித்தவர் ஒருவர் அருட்தந்தை மரிய சேவியர் அடிகளார் என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் துன்புற்ற தமிழ் மக்களின் மன வலிகளை கலை வடிவங்களாக தந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களை நேசிக்கும் சமூக பிரஞ்சை மிக்க கலைஞர்களைஉருவாக்கியவர் என்றும் அன்புக்கும் கருணைக்கும் கைகள் உள்ளன, அவைகள் அழுவோரின் கண்ணீரை துடைக்க நீளும்  எமது மக்களின் துயர் துடைக்க யாருமற்றிருந்த ஒரு சூழலில்,

மக்களின் அழுகுரல் கேட்டு அவர்களின் கண்ணீரை துடைக்க மரிய சேவியர் அடிகளாரின் கைகள் நீண்டிருந்தன என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அந்த களத்தில் நாம் நின்றவர்கள் என்பதால், அதற்கான சில ஏற்பாடுகளை என்னிடமிருந்தும் அவர் பெற்றவர் என்பதால் எமது மக்கள் மீதான அவரது ஆழ்மன நேசிப்பை நான் நேரில் கண்டு வியந்திருக்கிறேன். இன்றும் அதை மரியாதைக்குரியதாக போற்றுகிறேன் என்றும் சுட்டிக்காட்டியதுடன் மறைந்தும் மறையாத அந்த ஒளிச்சுடருக்கு  ஆழ்மன அஞ்சலி மரியாதையை செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர் நியமனம் தொடர்பில் நடந...
கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்...

இரு தரப்பு மக்களும் சம நிலையில் வாழும் சூழல் உருவாக்கப்டுவதனூடாகவே நாட்டில் இன நல்லிணக்கததை உருவாக்க...
வடக்கு குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு திகதி மாற்றம் - அமைச்சர் டக்ளஸின் ஆலோசனைக்கமைய ...
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ...