நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, August 24th, 2021

நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருக்கின்ற நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தினை நிறைவு செய்வதற்கு தடையாக இருக்கின்ற காரணிகளை களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்துள்ளார்.

அதேபோன்று, களப்பு அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்னாயக்கா மற்றும் சம்மந்தப்பட்ட நிறைவேற்று அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

000

Related posts:

மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது - அமைச்ச...