நீரிழிவு நேயைக் கட்டுப்படுததவது தொடர்பில் பரந்தளவிலான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017

நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கை 20 இலட்சம் எனவும் கூறப்படுகின்றது. அடையாளம் காணப்படாத மற்றும் முழுமையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரம், நீரிழிவு நோய் காரணமாக நாடாளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 5 இலட்சம் என்றும் தெரிய வருகின்றது. குறிப்பாக, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு உட்படுகின்ற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் தற்போதைய நிலையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 60 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், 2014ஆம் ஆண்டில் 1,500 பேரும், 2015ஆம் ஆண்டில் 1,600 பேரும், 2016ஆம் ஆண்டில் 1,645 பேரும் நீரிழிவு நோயாளர்களாகப் புதிதாக பதிவாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மேலும் 2,721 பேர் புதிதாகப் பதிவாகியுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாiலையின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

நீரிழிவு நோய் ஒரு தொற்று நோயாக இல்லாத போதிலும், தற்போதைய நிலையில் நாடளாவிய ரீதியில் இந் நோய் மனித ஆரோக்கியத்திற்கு பாரியதொரு சவாலாகவே  தோற்றம் பெற்றுள்ள நிலையில், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதிலும்,  இவை மேலும் வலுவுள்ளதாகவும், பரந்தளவிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

வேலணை திருவள்ளுவர் சனசமூக நிலைய மேம்பாடு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!
சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடு...
கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...