சாரதி பயிற்சிகளின்போது சாரதிகளின் அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் தொடர்பிலும் அவதானங்கள் எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, February 8th, 2017

சாரதி பயிற்சிகளின்போது, தனியாக வாகனங்களைச் செலுத்த முடியுமா என்பது குறித்து மாத்திரம் அவதானங்களைச் செலுத்துவது போதுமானதல்ல. அந்தப் பயிற்சியின்போது, அறிவு, திறன், எண்ணங்களின் கூட்டிணைவுகள் என்பவை தொடர்பிலும் உரிய அவதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் பார்க்கின்றபோது, சாரதிகள், பயணிகள், பாதசாரிகள், மோட்டார் போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்து அமைச்சு, பயணிகள் போக்குவரத்து அதிகார சபை போன்ற பல்துறையினரதும் இணைந்த ஒத்துழைப்புகளுடன் கூடியதான தேசிய வேலைத் திட்டமே மேற்படி வீதி விபத்துகளை தடுப்பது தொடர்பில் அவசியமாகிறது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

வாகன நெரிசல்கள் எற்படுவதும், விபத்துகள் எற்படுவதும் போன்ற பிரச்சினைகள் தீர்வின்றிய பிரச்சினைகள் அல்ல. மனித திறன்களை அதிகரிப்பதன் ஊடாக உலகின் அபிவிருத்தியடைந்துள்ள நாடுகள் இப்பிரச்சினைகளை மிகவும் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளன. இதன் மூலம் 85 வீதமான வாகன நெரிசல்களையும், விபத்துகளையும் தவிர்க்க இயலுமாகவுள்ளதாகவும் தெரிய வருகிறது.

அந்த வகையில், சுமார் 60 வருடங்களுக்கு முன்பதாக பிரித்தானிய நாட்டில் ‘ஹென்டன் வாகனக் கட்டுப்பாட்டு முறைமை’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு, இன்றும் அது நடைமுறையில் இருப்பதாகவும், மனித திறன்களை விருத்தி செய்வதே இதன் இலக்கு என்றும், இதனடிப்படையில், பாதைகளை பயன்படுத்துவது தொடர்பிலான அறிவு, புரிந்துணர்வு போன்றவற்றை அந்த நாட்டு மக்களுக்கு பாடசாலை செல்லும் வயதிலிருந்தே வழங்கப்படுகின்றது என்றும் தெயவருகிறது. இந்த முறைமை வீதி விபத்துகளைக் குறைப்பதற்கு வலுவுள்ளதொரு திட்டமாக இருப்பதால், இது குறித்து உரிய அவதானங்களைச் செலுத்தி, அதனை எமது நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

 Untitled-1 copy

Related posts: