நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் – அருட்கலாநிதி ஜோசப் குணாளின் அஞ்சலி உரையில் செயலாளர் நாயகம்!

Thursday, April 12th, 2018

இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்து பாடுபடுவேன்… அதற்காக உத்தமமான வழியில் விவேகமாய் நடப்பேன் என்னிடத்தில் வாருங்கள் என்ற அன்மீக அழைப்பை ஏற்று தன்னை அர்ப்பணித்தவர் அருட்தந்தை குணாளன் தியாகராஜன் அவர்கள் என ஈழ மகக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற அமரர் வணபிதா ஜொசப் குணாளன் தியாகராஜா அவர்களது இறுதி நிகழ்வில் அஞ்சலிமரியாதை செலுத்தியபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தனது அஞ்சலி உலைரயில் மேலும் தெரிவிக்கையில் –

நாற்பது வருடங்களுக்கு பின்னர் எனது அரசியல் பாதைக்கு உரமிட்டு வளர்த்த இந்த இடத்திற்கு நான் மீண்டும் வந்துள்ளது எனக்கு மிகப்பெரும் திகில் நிறைந்ததாக காணப்படுகின்றது.

ஆனாலும் இந்த வரவு எனது உற்ற நண்பரது மரணத்திற்கான வரவாக இருப்பதனால் அது எனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளது.
ஒரே பாடசாலையில் கல்விகற்ற நாம் ஒரே இலக்கை தேர்ந்தெடுத்தாலும் அதற்கான பாதைகள் வெவ்வேறாக அமைந்தது. நான் அரசியலை நோக்கி பயணித்தேன். எனது நண்பர் ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்தார்.

தன்னைப்போல் பிறரையும் அன்பு செய்யும் பரிசுத்தமான வழியில் அவர் பணியாற்றியவர். நாம் அரசியல் வழியில் நின்று உழைத்தாலும் அடிகளார் நேசித்த அதே ஆன்மீக தத்துவங்களையும் நாம் ஏற்றுக்கொண்டவர்கள்.

அது போலவே அடிகளார் அவர்களுடைய குடும்பத்தவர்கள் எமது உரிமை போராட்டத்தின் ஆரம்ப கால அரசியலிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள். அவருடைய சகோதரர் அவர்கள் என்னுடைய ஆரம்பகால அரசியல் நடவடிக்கையில் அர்ப்பணிப்போடு பங்களித்தவர்.

அரசியல் மட்டுமல்ல ஆன்மீகமும் மக்களுக்கு சிறந்த வழிகாட்டலை கொடுக்க வேண்டும். அன்பும் கருணையும் இரக்கமும் அவனியை ஆளவேண்டும் என்ற நித்திய சமாதான சூழலை உருவாக்க வேண்டும்.

அதற்காக உழைத்தவர் அருட்தந்தை குணாளன் தியாகராஜன் அவர்கள்.. நித்திய உறக்கத்தில் அவர் இன்று ஆழ்ந்து போனாலும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் எமது மத்தியில் வாழ்ந்து கொண்டேயிருக்கும் – என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தனது அஞ்சலி உரையில் தெரிவித்துள்ளார்.

Related posts: