நாட்டை ஆழ்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – கூட்டுப்பொறுப்போடு உழைக்க வாருங்கள் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, November 22nd, 2023

கடற்றொழில் அமைச்சராக வருவதற்கு முன்னரே எங்கள் கடல் வளம் எமது மக்களுக்கே சொந்தமென்று களத்தில் இறங்கி காரியம் ஆற்றியவன் நான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அலுவலங்கள்,  நாடாளுமன்றம், நாடாளுமன்ற அவைத் தலைவர் அலுவலகம் உட்பட, ஆணைக் குழுக்களும் உள்ளடங்களாக 25 நிறுவனங்கள் தொடர்பிலான வரவு – செலவுத் திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முன்மொழிவின் வாத விவாதங்களில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் இருந்து கொண்டே கடற்றொழிலாளர் பிரச்சினைகள் குறித்து கரிசனையோடு உழைத்த வரலாறுகளை எமது மக்கள் அறிவார்கள். ஆகவே கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை.

நாட்டை ஆழ்பவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டுப்பொறுப்போடு  உழைக்க முன் வாருங்கள் ,மக்கள் உங்களுக்கு வாக்களித்தது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு  காண்பதற்காகவே, மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல, அல்லது ஊடக்கங்களுக்காக உரத்து கூச்சலிட்டுவிட்டு நாடாளுமன்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துவிட்டு போவதற்காக அல்ல.தென்னிலங்களை அரசியல் சக்திகள் தாம்  ஆளும் கட்சியாக  வென்றுமக்களுக்கு சேவாயாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

ஆனாலும் சக தமிழ தரப்பினர் பலரும் எதிர்ப்பரசியல் நடத்தி கொக்கரிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இத்தகைய சாபாக்கேடுதான் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள்தீராப் பிரச்சினையாக நீடித்து வரவும் காரணமாக இருந்து வருகிறது.

‘கொன்றால் பாவம், திண்றால் போச்சி’ என்ற நிலைப்பாடு, இதர தமிழ்க் கட்சிகளுக்கு இருக்கலாம். ஆனால், நான் அந்த நிலைப்பாட்டில் இல்லை என்பதை அனைவரும் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
ஈ.பி.டி.பி சொல்லிவந்த மாற்றுக் கருத்துத்தான் இன்று பலதரப்பட்டவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்...
வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு...