நாடு பொருளாதார நெருக்கடிநிலையை எதிர்கொண்டிருந்தபோதும் மக்களின் நலன்களில் அரசாங்கம் அக்கறையுடனேயே இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 12th, 2024

பொருளாதார நெருக்கடிநிலையை நாடு எதிர்கொண்டிருந்தபோதும் உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவந்த ஊழியர்கள் ஒருதொகுதியினருக்கு நிரந்தர நியமனம் இன்று பிரதமர் தினேஸ் குணவர்த்னவால் வழங்கப்பட்டுள்ளது.

இது எமது கோரிக்கையின் நிமித்தம் மக்கள் மீது ஜனாதிபதி மற்றும் இன்றைய அரசாங்கம் கொண்டுள்ள அக்கறையாகவே இருக்கின்றது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு இன்று (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன..

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில் -,

மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர  நியமனங்களை பெற்றுக்கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பிரதமர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதனடிப்படையில் அவர்கள் இவர்கள் இருவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.

இதேநேரம் 165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன இதனூடாக இந்த ஊழியர்களின் நீண்ட கால ஏக்கத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்த அமைச்சர் இன்றும் பலர் நிரந்தர நியமனங்களுக்காக காத்திருக்கின்றனர். அவர்களது கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேநேரம் யாழ் மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  யாழ். மாவட்ட இன்றைய விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன  கலந்து கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன் யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இன்றைய கூட்டத்தில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், , நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம், பிரதேச செயலாளர்கள், இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரிகள். என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

000

Related posts: