நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் – பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Saturday, June 27th, 2020
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அடியவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் நீக்கப்படுள்ளது.
நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்ற நிலையில், கொவிட் 19 தொடர்பில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அடியவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மக்களின் மத ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை, சில வரையறைகளுடன் அடியவர்கள் உற்சவகால வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய தினமும் அடியவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் அவர்கள், அமைச்சரவை தீர்மானங்களை தெளிவுபடுத்திய நிலையில், தற்போது அடியவர்கள் சுதந்திரமாக ஆலய வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


