நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!

Wednesday, November 15th, 2017

நந்திக்கடல் புனரமைப்புத் திட்டம். இந்தத் திட்டம் தொடர்பில் கௌரவ கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி ரீதியிலான ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தேன். அதுமட்டுமன்றி, கடந்த வரவு – செலவுத் திட்ட உரையிலும், அதற்குப் பின்னரான சில நாடாளுமன்ற உரைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி இருந்தேன். அதேபோன்று, மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் வலியுறுத்தி இருந்தேன். இந்த இரு திட்டங்களும் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்காக, எமது மக்கள் சார்பாக எனது நன்றியை கௌரவ அமைச்சர்களான மகிந்த அமரவீர மற்றும் மங்கல சமரவீர ஆகியோருக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த இரு திட்டங்களும் செயற்படுத்தப்பட்டால், எமது மக்களில் பல ஆயிரக் கணக்கானோருக்கு சிறந்த வாழ்வாதாரங்கள் கிட்டும் என்பது மட்டுமல்ல, எமது தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பினை வழங்கும் என்பது நிச்சயமாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

06

Related posts:


தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்களஸ் தேவ...
பண்டத்தரிப்பு சாந்தை கிராம மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் -  டக்ளஸ...
கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரா...