நடைமுறை சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் மக்களிடம் நான் தொடர்ச்சியாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, April 15th, 2024

நடைமுறை சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் நான் கடந்தகாலத்திலிருந்து இன்றுவரை மக்களிடம் கூறிவந்துகொண்டிருக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்கள் தெளிவான நடைமுறை சார்ந்த கருத்துக்களை கேட்டு அவர்களோடு பயணிக்கும் போதுதான் அரசியலுரிமை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வுகாண முடியும் என்றும் இதை தனது அனுபவத்தினூடாக கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அச்சுவேலி வடக்கு சனசமூக நிலையம் மற்றும் கதிரொளி அறிவகம் இணைந்து புதுவருட தினத்தை முன்னிட்டு நடத்திய விளையாட்டு நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரிசில்களை வழங்கி வைத்ததுடன் வெற்றி பெற்ற 17 மாணவர்களுக்கு தலா 5000 ரூபா வீதம் வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தீராப் பிரச்சினைகள் தீர்வுகளை அடைவதற்கு தமிழ் மக்கள் சரியான ஒரு அரசியல் அத்திவாரத்தை அல்லது சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றம் வரும்போதுதான் தீர்வுகளை இலகுவாக காணமுடியும்.

எமது அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வுகளை அடைய  எது சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்பதை நான் கடந்த 30 ஆண்டுகளாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன்.

ஆனால் அன்றிருந்த இயக்கங்களோ தமிழ் அரசியல் தரப்பினரோ எனது கருத்துக்களை  செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எடுத்துக்ககொண்டு உசுப்பேற்றும் அரசியல் கருத்துக்களை முன்வைத்து எமது மக்களை இடம்பெயர்வுகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

ஆனாலும் தற்போது அத்தகைய அரசியல் தரப்பினர் நான் 30 வருடத்துக்கு முன் சொன்னதை முணுமுணுக்க தோடங்கியுள்ளனர். அதை நான் வரவேற்றாலும் அவர்களது அந்த முணுமுணுப்பு கூட உண்மைத்தன்மையானதாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

வாக்குகளை அபகரிப்பதற்காக தேசியம் பேசுபம் சுயநலவாதிகளின் நிலை அவ்வாறுதான். இருக்கும். அதனால் அவர்களை குறைகூறாமல் எமது மக்கள் உண்மைத்தன்மையுடன் வெளிப்படையாக தெளிவான கருத்துக்களை கூறுபவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களோடு பயணிக்கும் போது பிரச்சினைகளை விரைவாகவும் இலகுவாகவும் தீர்தக்க முடியும் என நான் எனது அனுபவத்தினூடாக கூறுகின்றேன்.

இதேநேரம் அபிவிருத்தி மட்டு் தான் எனது இலக்கல்ல நான் முன்னெடுக்கும் ஒவ்வாரு அபிவிருத்தியிலும் தமிழ் மக்கள் சார்பான வலுவான ஓர் அரசியல் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் மக்களின் வாழ்வாதாரம் சிறப்பானதாக அமைய வேண்டும் என்பதற்காக அதற்கான திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சிந்தனைகளே தனது மனதில் அதிகம் வலுப்பெற்றிருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
கரைவலை தொழிலில் 'வின்ஞ்' பயன்படுத்து தொடர்பில் விஷேட குழு ஆராய்ந்து பரிந்துரைக்கும் - சங்கப் பிரதிநி...
பலாலி மானம்பிராய் பிள்ளையார் ஆலைய நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!