நடைபெறுகின்ற விசாரணைகள் எந்தளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது? டக்ளஸ் எம்.பி. கேள்வி.

Friday, June 28th, 2019

அவசரகாலச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டாலும் எமது நாட்டின் நடைமுறை நிலைமைகளை கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையானது கடைப்பிடிக்கப்படுவது அவசியமாகும் என்ற எமது நிலைப்பாட்டினை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டபின் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளில் பல்வேறு விடயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

எனினும் தற்போதைய தெரிவுக்குழுவின் விசாரணைகளைப் பொறுத்த வரையில் அதன் நகர்வுகள் மேலும் அரசியல் ரீதியிலான நெருக்கடி நிலைமைக்குள் நாட்டை தள்ளிவிடுமோ? என்ற அச்ச நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

ஒரு பாதிப்பு தொடர்பில் ஆராய்கின்றபோது அது இன்னொரு பாதிப்பினை நோக்கிச் சென்றுவிடக் கூடாது என்பதில் மிக அவதானமக இருக்க வேண்டிய தருணத்தில் இந்த நாடு இருந்து கொண்டிருக்கின்றது என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.   

அத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகள் எந்தளவிற்கு நம்பகத் தன்மை வாய்ந்தது? என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் புனித பாப்பரசரைச் சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றிருந்த எமது காதினல் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை சர்வதேச ஊடகங்களின் முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இது இந்த நாடு குறித்த சர்வதேசத்தின் நம்பகத் தன்மை தொடர்பிலான கேள்விக் குறியானதொரு நிலையினைத் தோற்று வித்திருக்கின்றது.

உயிரத்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான காலகட்டத்தில் அரசு மீது காதினல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையினை காதினல் அவர்கள் முற்று முழுதாகவே தற்போது இழந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. இதற்கு இந்த அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என நினைக்கின்றேன்.

இத்தகைய நிலையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் வெறும் அரசியல் மயமாக்கப்படாமல் குறித்த விடயம் தொடர்பில் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...
பொதுத் தீர்மானங்ககளின் அடிப்படையில் செயற்படுங்கள் – தீவகப் பிரதேச செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாள...
போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் - பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிர...

வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயங்களே நடைமுறைப்படுத்தப்படும் - பேசாலை பகுதி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ்...
வெளிச்சமான பயணத்தில் மீண்டும் இருளுக்கு வித்திடுவது அவரவர் தத்தமக்கே கரி பூசிக் கொள்வது போன்றது –...