வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

வரவுள்ள புதிய ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தைப் எமது மக்களின் நலன்களில் இருந்து பார்க்கும்போது அது அதிகளவில் எமது மக்களுக்கு மகிழ்ச்சியினை தரமுடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது என்பதை நான் இங்கு தெரிவித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம்.  ஆனால் கடந்த காலங்களிலும் அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்ததுள்ளதாக கூறிய நிலையிலும், அவ்வாறு குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத நிலை எமது மக்களுக்கும்  குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறு விலை குறைக்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைக்கப்பட்ட விலைகளுக்கு விற்கப்படுகின்றனவா என்பது குறித்து  உறுதிப்படுத்த வேண்டியுள்ளது துறைசார்ந்தவர்களது கடப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

01

Related posts:

கூட்டமைப்பின் இரட்டைத் தோணி அரசியல் அவர்களையும் மூழ்கடித்து, தமிழ் மக்களையும் மூழ்கடித்துவிடும்!
பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்  - டக்ளஸ் தேவானந்த...
ஈ.பி.டி.பி. கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் சர்வலோக நிவாரணியாக அமையும்: அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ...

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ...
ஊர்காவற்துறையில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...