நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் – கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
Thursday, October 1st, 2020
நச்சுக் காற்றை புறந்தள்ளி ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருவேன் என்று கிளிநொச்சி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இன்று (01.10.2020) இடம்பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தினை 1AB பாடசாலையாக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் –
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான முடிவுகள் காரணமாக நாம் இருந்ததையும் இழந்து நிற்பதுவே எமது வரலாற்று அனுபவமாக இருக்கின்றது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், தற்போதும் சில அரசியல் சக்திகள் தங்களுடைய குறுகிய சுயநலன்களுக்காக மக்களை தவறாக வழிநடத்துவதாவும் அதற்கு மக்கள் பலியாகி விடக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டதுடன் மக்கள் கடந்த காலங்களைப் போன்று நச்சுக் காற்றை வாழ்வை மீண்டும் ஆரோக்கியமற்ற சூழலுக்குள் தள்ளிக் கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலையை தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், சரியான வழிமுறையின் ஊடாக விடயங்களை அணுகுவதன் மூலம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பாடசாலை தரம் உயர்த்தப்படுகின்ற முயற்சிக்கு கிடைத்த வெற்றி அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|





